
மருத்துவமனையில் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறிய மம்முட்டி
அப்போது அங்கிருந்த காவலர்களை தாக்கி விட்டு தப்பித்து ஓட முயன்ற அந்த நபர் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டாக்டர் வந்தனாவை கத்தியால் பலமுறை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே வந்தனா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்தனாவின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி வந்தனாவின் வீட்டிற்கு நேரிலேயே சென்று வந்தனாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோர் மோகன்தாஸ் மற்றும் வசந்தகுமாரி ஆகியோருக்கு தனது ஆறுதலையும் தெரிவித்தார். மம்முட்டியுடன் அவரது ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டோ ஜோசப் மற்றும் நடிகர் ரமேஷ் பிஷரோடி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!