
தெருத்தெருவாக திரையிடப்படும் படம்: தயாரிப்பாளர் புகார்
இந்த படம் ஆந்திர மாநில கிராமத்து கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன உரசல்களால் பிரிந்த தெலுங்கு குடும்பம் ஒன்று அந்த வீட்டின் மூத்தவர் மரணத்தால் எப்படி ஒன்று சேர்கிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தை பார்க்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கான பெண்கள் கண்ணீர்விட்டு அழுதபடியே தியேட்டரை விட்டு வெளியே வரும் வீடியோக்கள் ஆந்திராவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை தெலங்கானாவின் பல பகுதிகளில் தெருவில் திரை கட்டி, இலவசமாகத் திரையிட்டு வருகிறார்கள். உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள். தியேட்டர்கள் இல்லாத ஊருக்கும் படத்தை கொண்டு செல்ல உள்ளூர் இளைஞர்களே இந்த படத்தை தங்கள் ஊரில் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு காட்டுகிறார்கள். தற்போது படம் ஒடிடியிலும் வெளிவந்திருப்பதால் அதனை பெரிய திரையில் காட்டுகிறார்கள். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜூ நிஜாமாபாத் போலீஸில் புகார் அளித்துள்ளார். பல கிராமங்களில் இந்தப் படத்தை இலவசமாகத் திரையிட்டுள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் படத்தைத் திரையிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!