
சித்தப்பாவை கெட்ட வார்த்தையில் திட்டுவதா? : தயங்கிய ராணா
நிஜத்தில் சித்தப்பா - மகனான வெங்கடேஷ், ராணா இருவரும் இதில் தந்தை மகன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த டிரெய்லரை பார்க்கும்போது அப்பாவுக்கும் மகனுக்கும் விரோதம் ஏற்பட்டால், அது எந்த அளவிற்கு செல்லும் என்பதை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது என்பதை உணர முடிகிறது.
இந்த வெப் சீரிஸில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராணா பேசும்போது, “இந்த வெப்சீரிஸில் அப்பா மகன் கதாபாத்திரங்களில் நாங்கள் இருவருமே நடித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் கதைப்படி இருவருமே எதிரும் புதிருமாக இருப்பவர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளில் திட்டும்படியான காட்சிகள் நிறைய இருந்தன. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், கன்னடத்திலும் கூட அதே வார்த்தைகளில் பேசி திட்ட வேண்டி இருந்தது. சினிமா தான் என்றாலும் என் சித்தப்பாவை அப்படி திட்டுவதற்கு தயக்கமாக இருந்தது. பின்னர் எப்படியோ இருவருமே ஒரு வழியாக சமாளித்து நடித்து முடித்தோம்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!