
ரிஷப் ஷெட்டியுடன் ஊர்வசி ரவுட்டேலா ; காந்தாரா 2வில் கதாநாயகியா?
இந்த நிலையில் தமிழில் லெஜெண்ட் படத்தில் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடித்த ஊர்வசி ரவுட்டேலா ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் "காந்தாரா-2 லோடிங்" என்கிற கேப்ஷனையும் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து காந்தாரா-2 படத்தில் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது போன்று செய்திகள் பரபரப்பாக பரவ ஆரம்பித்தன. ஆனால் காந்தாரா பட தயாரிப்பு நிறுவனத்தின் வட்டாரத்திலிருந்து வெளியான தகவலில், காந்தாரா-2ல் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக நடிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது..
“சமீபத்தில் ரிஷப் ஷெட்டி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்காக அவர் வந்திருந்த இடத்திற்கு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக ஊர்வசி ரவுட்டேலாவும் வந்திருந்தார். அப்போது ரிஷப் ஷெட்டி அங்கு இருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க விரும்பினார். ரிஷப் ஷெட்டியும் மகிழ்ச்சியுடன் ஊர்வசியை சந்தித்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி ரவுட்டேலா காந்தாரா-2 லோடிங் என்கிற வார்த்தையை குறிப்பிட்டதால்தான் இந்த அளவிற்கு அந்த செய்தி பரபரப்பாகிவிட்டது” என்று கூறியுள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!