
மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய பிரியதர்ஷன் - லிசி
பிரியதர்ஷனுக்கும் நடிகை லிசிக்கும் கடந்த 2015ல் கருத்து வேறுபாடு, ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின்னர் முறைப்படி விவாகரத்தும் பெற்று கடந்த ஏழு வருடங்களாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இருந்தாலும் தங்களது குழந்தைகளின் நலன் கருதி ஒரு சில நிகழ்வுகளில் மட்டும் ஒன்றாக கலந்து கொண்டு வந்தனர். இந்த நிலையில் இவர்களது மகன் சித்தார்த்தின் திருமணம் கடந்த வெள்ளியன்று மாலை சென்னையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
மணமகள் மெலனி அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர். அங்கே வி.எப்.எக்ஸ் துறையில் பணியாற்றி வருகிறார். சித்தார்த்தும் அதே துறையில் பணியாற்றி வருவதால் இவர்களது திருமணம் காதல் திருமணம் என்று சொல்லப்படுகிறது. இந்த திருமணத்தில் பிரியதர்ஷனும் லிசியும் ஒன்றாக இணைந்து திருமண சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றினர். ரசிகர்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், இந்த நிகழ்விற்காக ஈகோ பார்க்காமல் ஒன்றிணைந்த பிரியதர்ஷன், லிசி இருவருக்கும் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!