
மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் ராஷ்மிகா - மஞ்சு வாரியர் படங்கள்
இந்த நிலையில் இந்த படங்கள் வெளியாகி சரியாக 8 நாள் கழித்து அதாவது வரும் ஜன.,20ம் தேதி இந்த இருவரும் நடித்துள்ள படங்கள் மீண்டும் ஒரே தேதியில் வெளியாகும் இன்னொரு ஆச்சரியம் நிகழப்போகிறது. ராஷ்மிகா முதன்முதலாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த படமான மிஷன் மஞ்சு மற்றும் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ள ஆயிஷா ஆகிய இரண்டு படங்களும் தான் ஜன-20ல் வெளியாகின்றன. இதில் மிஷன் மஞ்சு திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியாகிறது. மஞ்சு வாரியரின் ஆயிஷா தியேட்டர்களில் வெளியாகிறது.
ராஷ்மிகா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்த குட்பை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது அதேசமயம் அவர் பாலிவுட்டில் முதன்முதலாக நடிக்க ஆரம்பித்த மிஷன் மஞ்சு படத்தை ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில் தற்போது அந்தப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதால் இந்த படத்திலும் ராஷ்மிகா கவனிக்கப்படுவாரா என்பது ரிலீஸுக்கு பின்னால் தான் தெரிய வரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!