
போதை வழக்கு காரணமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த மலையாள படம் நீக்கம்?
இந்த நிலையில் தற்போது நல்ல சமயம் என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஒமர் லுலு. இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியானது. அதேசமயம் படத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக அதை புரமோட் செய்துள்ளதாகவும் கூறி போதை பொருள் தடுப்பு துறை, ஒமர் லுலு மீது வழக்கு பதிந்துள்ளது.
சென்சார் அதிகாரிகள் அனுமதி தந்த பின்னரும் தன் மீது வழக்குப் பதியப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது என்றும் இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் ஒமர் லுலு.
மேலும் தனது "நல்ல சமயம்" படத்தை இந்த வாரத்துடன் தியேட்டர்களில் இருந்து வாபஸ் பெறப்போவதாகவும் இது குறித்து தானும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் இந்த வழக்கில் தனக்கு நல்ல தீர்ப்பு வந்த பின்னரே இந்த படத்தை மீண்டும் திரையிட போவதாகவும் கூறியிருந்தார் ஒமர் லுலு.. இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நல்ல சமயம் படம் தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!