
கோவாவில் விதிமுறைகளை மீறி சொகுசு மாளிகை கட்டும் நாகார்ஜுனா
இந்த நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛1994ம் ஆண்டின் பஞ்சாயத்து சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டட பணிகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரியமான மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடம் கட்டப்படக்கூடாது என்று விதிமுறை இருந்தும் அரசு அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு கட்டட பணிகளை கண்டு கொள்ளவில்லை. கடந்த ஒரு வருடமாக பணிகள் நடந்து வரும்போது இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இப்போது எதிர்ப்பு அதிகரித்தவுடன் கண்துடைப்புக்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர், என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!