பிரியதர்ஷனின் கொரோனா பேப்பர்ஸ் படப்பிடிப்பு நிறைவு
டிச 15, 2022
Advertisement
மலையாள திரையுலகில் தொடர்ந்து மோகன்லாலை வைத்து படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் பிரியதர்ஷன். கடந்த வருடம் வெளியான "மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்" படத்தை தொடர்ந்து மீண்டும் ஆந்தாலாஜி படம் ஒன்றுக்காக மோகன்லாலை வைத்து அதில் இடம்பெறும் ஒரு குறும்படமாக ஓலவும் தீரவும் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து மலையாள திரையுலகில் கடந்த வருடம் மிகுந்த சர்ச்சைகளில் அடிபட்ட இளம் நடிகர் ஷேன் நிகம் கதாநாயகனாக நடிக்கும் கொரோனா பேப்பர்ஸ் என்கிற படத்தை இயக்கி வந்தார் பிரியதர்ஷன்.
கடந்த அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்துள்ளார் பிரியதர்ஷன். இந்த படத்தில் வினீத் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார்.. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற என்ன தான் கேஸ் குடு என்கிற படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் மலையாள படம் இது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!