
டி20 போட்டி : ரசிகரிடம் பந்தயத்தில் 5 லட்சம் தோற்ற இயக்குனர்
ரசிகர்களுடன் எப்போதுமே சோசியல் மீடியாவில் உரையாடும் பழக்கம் கொண்டவர் ஒமர் லுலு. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து மோதுவதற்கு முன்னதாக சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் இந்த போட்டியில் யார் ஜெயிப்பார் என பந்தயம் கட்ட முடியுமா என ஒமர் லுலுவுக்கு சவால் விடுத்துள்ளார். ரசிகர் இங்கிலாந்து ஜெயிக்கும் என்று பந்தயம் கட்ட, ஒமர் லுலு பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என கூறியுள்ளார். பந்தயத்தொகையாக 5 லட்சம் ரூபாயை நிர்ணயம் செய்தார்கள்.
இந்தநிலையில் இங்கிலாந்து ஜெயித்துவிட சொன்னபடி அந்த இளைஞரை தனது இடத்திற்கே வரவழைத்தார் ஒமர் லுலு. அதுகுறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அந்த இளைஞரை சோசியல் மீடியமாக மூலமாக அறிமுகப்படுத்தியும் உள்ளார். இந்த 5 லட்சம் ரூபாயை நான் இவருக்கு தந்துவிட்டேனா இல்லையா, அவர் வாங்கிக் கொண்டாரா இல்லையா என்பது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.. சாகும்வரை அந்த விஷயம் யாருக்கும் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வோம்” என்று கூற அதற்கு அந்த ரசிகரும் புன்னகையுடன் தலையசைத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!