
தெலுங்கில் விக்ரமை ஓவர்டேக் செய்த காந்தாரா
இந்தநிலையில் காந்தாரா திரைப்படமும் கேஜிஎப் படத்தை போல சில சாதனைகளை படைத்து வருகிறது. ஒரு சில இடங்களில் கே ஜி எப் படத்தின் சாதனைகளையும் முறியடித்து வருகிறது. அந்தவகையில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான காந்தாரா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் தெலுங்கில் பெற்ற வசூலை ஓவர்டேக் செய்திருந்தது. இந்த நிலையில் வெளியான 13 நாட்களில் தெலுங்கில் கமலின் விக்ரம் படம் வசூலித்த தொகையை தற்போது தாண்டியுள்ளது காந்தாரா. இப்போது வரை தெலுங்கில் 45 கோடி வசூல் செய்துள்ள காந்தாரா, இன்னும் சில நாட்களில் 50 கோடி இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!