
தெலுங்கில் வேகமெடுக்கும் காந்தாரா : அக்டோபர் 15ல் ரிலீஸ்
இந்த நிலையில் அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னடத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரிஷப் செட்டி என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வெளியாகும்போது சாதாரண படம் என்கிற அளவில் தான் வெளியானது. ஆனால் படம் வெளியான நாளிலிருந்தே இந்த படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்களும் படம் பார்த்தவர்களின் ஆச்சரிய கருத்துக்களும் இந்த படத்திற்கான எல்லையை தற்போது விரிவுபடுத்தி உள்ளன.
அந்த வகையில் இந்த படத்தை தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. மலையாளத்தில் இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார். அதேசமயம் தெலுங்கில் இந்த படத்தின் டப்பிங் உரிமையை பெற்றுள்ள பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இதன் பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளார். மேலும் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!