
போட்டிக் களத்தில் குதித்த கன்னட சினிமா
இந்த வருடத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான "ஆர்ஆர்ஆர்," கன்னடப் படமான "கேஜிஎப் 2", தமிழ்ப் படமான "பொன்னியின் செல்வன்" ஆகியவை உலக அளவிலும் வசூலைக் குவித்து ஹிந்திப் படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலித்தது.
"கேஜிஎப் 2" படத்தின் வெற்றி இந்திய சினிமாவை கன்னட சினிமா பக்கம் இன்னும் அதிகமாகத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்கடுத்து தற்போது "கன்டரா" படம் அதைத் தொடர்கிறது. செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த இந்தப் படம் விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த பத்து நாட்களில் 50 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்தை கர்நாடகா தவிர மற்ற மாநில ரசிகர்களும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
தென்னிந்திய சினிமாக்களில் அதிகமான வசூல் படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் முன்னிலை வகித்தன. தரமான படங்களில் மலையாள சினிமா முன்னிலை வகித்தது. இப்போது வசூல், தரம் என இரண்டிலும் மற்ற தென்னிந்திய சினிமாக்களுடன் போட்டி போடும் அளவிற்கு கன்னட சினிமா வளர்ந்து வருவது அவர்களுக்குப் பெருமையைக் கொடுத்து வருகிறது. மற்ற மொழி திரையுலகினருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!