
துல்கரின் கிங் ஆப் கோதா படப்பிடிப்பு தொடங்கியது
செப் 27, 2022
Advertisement
தெலுங்கில் சீதாராமன் மற்றும் ஹிந்தியில் சுப் என துல்கர் சல்மான் நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்த நிலையில், தற்போது தனது அடுத்த படமான கிங் ஆப் கோதா என்ற படத்தில் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இப்படத்தை துல்கர் சல்மானின் நண்பர் அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தமிழகத்தில் காரைக்குடி பகுதியில் தொடங்கியுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஷான் ரகுமான் இசையமைக்கிறார். மலையாளத்தில் உருவாகும் இப்படம் பல மொழிகளில் டப் செய்து வெளியாக உள்ளது.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!