மலையாளத்தில் படம் தயாரிக்கும் ‛அம்மா கணக்கு இயக்குனர்
செப் 10, 2022
Advertisement
கடந்த வருடம் மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மின்னல் முரளி. டொவினோ தாமஸ் மற்றும் தமிழ் நடிகர் குருசோமசுந்தரம் இருவருமே இந்த படத்தில் சூப்பர்மேன் பவர்கொண்ட ஹீரோ மற்றும் வில்லன் என்கிற கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்திற்கு ஜஸ்டின் மேத்யூ என்பவர் இன்னொரு கதாசிரியருடன் இணைந்து கதை எழுதியிருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக அவர் எழுதிய கதையை பிரபல பாலிவுட் இயக்குநரும். தயாரிப்பாளருமான அஸ்வினி ஐயர் திவாரி தயாரிக்கிறார்..
2016-ல் அமலாபால் நடிப்பில் தமிழில் வெளியான அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் தான் அஸ்வினி ஐயர் திவாரி. இந்த படத்தின் மூலம் முதன்முதலாக மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் இவர், தனது அம்மா தான் வளர்ந்து வந்த காலகட்டத்திலே மலையாள படங்களை பார்க்க தன்னை உற்சாகப்படுத்தினார் என்றும் அதைத் தொடர்ந்து தான் தற்போது மலையாளத்தில் படம் தயாரிக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!