
தெலுங்கு, ஹிந்தியைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகும் கார்த்திகேயா 2
செப் 10, 2022
Advertisement
நிகில் சித்தார்த், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் ஹிந்தி, தெலுங்கில் உருவான படம் கார்த்திகேயா 2. தெலுங்கில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. அதேபோல் ஹிந்தியிலும் பெரிய அளவில் வசூலை குவித்துள்ளது. பாலிவுட் ஹீரோக்கள் அமீர்கான், அக்ஷய்குமார் போன்ற ஹீரோக்கள் நடித்த படங்களுடன் இப்படமும் வெளியான நிலையில், அந்த படங்களை விட அதிகப்படியாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இப்பட நாயகி அனுபமா பரமேஸ்வரனுக்கு மலையாளத்தில் மார்க்கெட் இருப்பதால் இந்த படத்தை செப்டம்பர் 23ம் தேதி கேரளாவில் வெளியிடுகிறார்கள். ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தியில் ஹிட் அடித்த படம் என்பதால் அங்கு கூடுதலான தியேட்டர்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!