
ஆச்சார்யா தோல்வி குறித்து நகைச்சுவையாக பேசிய சிரஞ்சீவி
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, "புதுமுகங்கள் நடித்த படம் தானே, தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை. நல்ல கன்டெண்ட் இருந்தால் நிச்சயமாக தியேட்டருக்கு மக்கள் வருவார்கள். சமீபத்தில் அப்படி வெளியான பிம்பிசாரா, சீதாராமம், கார்த்திகேயா 2 ஆகிய படங்கள் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை இருக்கையில் அமரவைத்து படம் பார்க்க வைக்கும் விதமாக இருந்தது. கன்டன்ட் தான் அதற்கு காரணம். கன்டென்ட் இல்லை என்றால் இரண்டாவது நாளே தியேட்டர் காலியாகிவிடும். அது என் படமாக இருந்தாலும் கூட அதுதான் ரிசல்ட். அப்படி சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்” என்று சமீபத்தில் வெளியான தனது ஆச்சார்யா, படத்தின் தோல்வி குறித்து பேச்சுவாக்கில் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார் சிரஞ்சீவி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!