
மைக் டைசனை கண்டு பயப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் அம்மா
இதுபற்றி அவர் கூறும்போது, “மைக் டைசனுடன் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் என்னை விட என்னுடைய அம்மா தான் ரொம்ப படபடப்பாக மாறிவிட்டார். சண்டைக்காட்சிகளின்போது தெரிந்தோ தெரியாமலோ என்னை மைக் டைசன் துன்புறுத்தி விடுவாரோ என்று பயந்தார். இதற்காக வீட்டில் சில பூஜைகள் கூட செய்தார். அதுமட்டுமன்றி படப்பிடிப்பு தளத்தில் உள்ள நிர்வாகிகளுடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசி படப்பிடிப்பு நிலவரம் குறித்து தெரிந்து கொண்ட பின்னர் தான் சற்று நிம்மதி ஆனார். மேலும் படக்குழுவினரில் முக்கியஸ்தர்கள் அனைவரிடமும் நீங்கள் தான் என் மகனுக்கு பொறுப்பு என்று உறுதி வாங்கிக் கொண்டார்கள்.
ஆனால் அவர் அவ்வளவு தூரம் பயப்படும் விதமாக மைக் டைசன் ஒன்றும் முரட்டுத்தனமான நபர் அல்ல.. பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர். ஒரு சாதாரண மனிதனைப் போல தனது குடும்பத்தைப் பற்றியும் தனது சொந்த விஷயங்களைப் பற்றியும் என்னுடன் அவர் இயல்பாக பகிர்ந்து கொண்டார்” என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!