
60 வயதில் நடிகராக வரவேற்பை பெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்
இந்த படத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகள் நீதிமன்ற அறைக்குள்ளையே நடைபெறும் விதமாக அமைந்திருந்தது. அந்த வகையில் இந்தப்படத்தை தாங்கிப்பிடிக்கும் ஒரு கதாபாத்திரமாக நீதிபதியாக நடித்திருந்த குஞ்சிகிருஷ்ணன், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். சோசியல் மீடியாவில் யார் இந்த நீதிபதி என்று ரசிகர்கள் தேடும் அளவுக்கு தற்போது இவர் பிரபலமாகிவிட்டார். அடிப்படையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய இவர், கடந்த 2020ல் தான் ஓய்வு பெற்றவர். அதுமட்டுமல்ல, தற்போது தனது கிராமத்தில் பஞ்சாயத்து உறுப்பினராகவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சினிமாவில் இதுதான் முதல் படம் என்றாலும், மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். படத்தில் நீதிபதியாக நடித்திருந்தாலும் கூட, இதுவரை நீதிமன்றத்தின் உள்ளே ஒரு முறை கூட நுழைந்ததில்லை. நீதிமன்றங்கள் சம்பந்தமான காட்சி இடம் பெறும் படங்களை கூட இவர் பார்த்ததில்லையாம். ஆனால் படத்தின் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் சொல்லிக்கொடுத்தபடி தனது மேடை நாடக அனுபவத்தை பயன்படுத்தி தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக பிரதிபலித்துள்ளார் குஞ்சிகிருஷ்ணன். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பல படங்களின் வாய்ப்புகள் தேடி வந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!