
கிறிஸ்டோபர் : மம்முட்டி பட டைட்டில் அறிவிப்பு
ஏற்கனவே மம்முட்டியை வைத்து பிரமாணி என்கிற படத்தை இயக்கியுள்ள உன்னிகிருஷ்ணன், கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மம்முட்டி படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் முதல் தேதியை முன்னிட்டு இந்த படத்திற்கு கிறிஸ்டோபர் என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியாகி உள்ளது. "பயோகிராபி ஆப் ஏ விஜிலன்ட் காப்" என்கிற இந்த படத்தின் டேக்லைன் மூலம் இதில் மம்முட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!