
குஞ்சாக்கோ போபன் படத்திற்கு ப்ரீ பப்ளிசிட்டி ஆக மாறிய எதிர்ப்பு
படம் நன்றாக இல்லை என யாருமே சொல்லவில்லை. அதேசமயம் இந்த படம் இப்போதைய ஆளும்கட்சியை கிண்டலடிக்கும் விதமாக தாக்கும் விதமாக இருக்கிறது என ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் இந்த படத்தை புறக்கணிக்குமாறு சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் குஞ்சாக்கோ போபனோ எந்த அரசையும் எதிர்த்து நாங்கள் படம் எடுக்கவில்லை. மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையை மையப்படுத்தியே இந்தப்படம் உருவாகி உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இந்த எதிர்ப்பே ப்ரீ பப்ளிசிட்டி ஆக மாறி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்து மாலை, இரவு காட்சிகளுக்கு தியேட்டர்களில் அதிக அளவு கூட்டத்தை அழைத்து வந்து விட்டது. குஞ்சாக்கோ போபன் படத்திலேயே முதல் நாள் வசூலிலும் பரபரப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படமாக இது இடம் பிடித்துவிட்டது என கேரள தியேட்டர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!