
ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ்
இந்த நிலையில் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் அப்படி ஒரு வரவேற்பு ‛ரா ரா ராக்கம்மா" பாடல் மூலம் கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கன்னடத்தில் சுதீப் நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோனா படத்தில் இடம்பெற்ற ரா ரா ராக்கம்மா என்கிற பாடலுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனமாடி ரசிகர்களை கிரங்கடித்தார். இந்த பாடல் யூடியூபில் ஒவ்வொரு மொழியிலும் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. தியேட்டர்களிலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து ஆட்டம் போடுகின்றனர். தனித்தனி வீடியோவாகவும் பலர் இந்தப்பாடலுக்கு ஆடி சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வரவேற்பை பார்த்து அதிசயித்து போன ஜாக்குலின் பெர்னாண்டஸ், இதனை தொடர்ந்து இப்படி ஒரு பாடலுக்கு தனக்கு நடனம் வடிவமைத்து கொடுத்ததற்காக நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட்டான அரபிக்குத்து பாடலுக்கும் ஜானி மாஸ்டர் தான் நடனம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!