
போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு
மோகன்லாலை பொறுத்தவரை ராணுவத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சில ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் 2009ம் ஆண்டில் இந்திய தரைப்படை மோகன்லாலுக்கு லெப்டினன்ட் கலோனல் (துணைநிலை படை அதிகாரி) பட்டத்தை அளித்து கவுரவித்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் அந்த கவுரவத்துடன் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில்தான் தற்போது இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலையும் பார்வையிட்டுள்ளார் மோகன்லால்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!