பிரித்விராஜ் படத்தில் இணைந்த ‛கேஜிஎப் இசையமைப்பாளர்
ஜூலை 29, 2022
Advertisement
நடிப்பு, டைரக்ஷன் என பிஸியாக இருக்கும் பிரித்விராஜ் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு "காளியன்" என்கிற படத்தில் நடிக்கப் போவதாக தானே முன்வந்து பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டார். 300 வருட காலத்திற்கு முந்தைய சரித்திர வீரன் "குஞ்சிரக்கோட்டு காளி" என்கிற கேரக்டரில் தான் பிரித்விராஜ் நடிக்கிறார் .
களரி பயிர்சிக்கலையில் குருவாக விளங்கும் மகேஷ் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஆனாலும் அறிவிப்பு வெளியாகி நான்கு வருடங்கள் கழித்து தற்போது இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ள நிலையில் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளராக ரவி பஸ்ரூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் படத்திற்கு இசையமைத்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!