
ஓடிடியில் வெளியாகும் அபர்ணா பாலமுரளியின் படம்
இந்த படத்தில் அவர் நடித்த பொம்மி கதாபாத்திரத்திற்கு அப்போதே ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த மாதம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அந்த படமும் வெற்றி பட வரிசையில் இணைந்த நிலையில், தற்போது தேசிய விருதும் இவரை தேடி வந்துள்ளதால் முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் அபர்ணா பாலமுரளி.
அந்த வகையில் தற்போது அபர்ணாவின் மீது வெளிச்சம் விழுந்துள்ள நிலையில், அதையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல், இவர் மலையாளத்தில் நடித்து வந்த சுந்தரி கார்டன்ஸ் என்கிற திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாக இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகரான நீரஜ் மாதவ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!