
இயக்குனர்கள், ஹீரோக்கள் சம்பள உயர்வால் சிக்கல்: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தெலுங்கு சினிமா ஸ்டிரைக்
தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓடிடி வெளியீடு மற்றும் நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் சம்பள உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. சம்பள உயர்வால் அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, செலவு குறைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுத்தாக வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்து, இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும். 2 மாதங்கள் கடந்தாலும் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
நேற்று சென்னையில் நடந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கல்யாண் இதனை உறுதி செய்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!