
என் படத்தை திரையிடாதது ஏன்? - திரைப்பட விழாவில் பெண் இயக்குனர் ஆர்ப்பாட்டம்
இந்தப் பட விழாவில் திரையிட, குஞ்சில்லா மாசிலாமணி என்பவர், தான் இயக்கிய "அசங்காதிதார்" என்ற படத்தை அனுப்பி இருந்தார். இது ஓடிடி தளத்தில் வெளியான "பிரீடம் பைட்" என்ற அந்தாலஜியில் இடம்பெற்ற ஒரு குறும்படம். பொதுவாக இந்த விழாவில் ஓடிடியில் வெளியான படங்கள் திரையிடப்படுவதில்லை. இதனை காரணம் காட்டி அசங்காததிதார் படத்தை நிராகரித்து விட்டனர்.
இந்த விதியை மாற்ற வேண்டும். எல்லா தளத்திலும் வெளியாகும் படங்களை வெளியிட வேண்டும் என்று கேரள பெண் இயக்குனர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இந்நிலையில் சர்வதே திரைப்பட தொடக்க விழாவில் இயக்குநர் குஞ்சில்லா மாசிலாமணி மேடை ஏறிச் சென்று அரசுக்கு எதிராகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அவரை அப்புறப்படுத்தினர். ஆனால் கைது செய்யவில்லை.
இது திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை திரைப்படவிழாவில் இயக்குனர் லீனா மணிமேகலை திடீர் ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!