
மஞ்சு வாரியர் புகாரில் கைதான இயக்குனர் சபதம்
இந்த புகாரின் அடிப்படையில் சனல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.. மஞ்சு வாரியர் மீது சனல்குமார் சசிதரன் இவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டதற்கு காரணம் அவர் இயக்கிய படம் என்கிற படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் அவர் மஞ்சு வாரியர் மீது அதிக உரிமை எடுத்துக் கொண்டதுதான் அவரது இந்த பதிவுக்கு காரணம்.. ஆனால் இதை மஞ்சுவாரியர் விரும்பவில்லை என்பதுதான் சனல்குமார் சசிதரன் மீதான புகாராக வெளிப்பட்டது.
தற்போது ஜாமீனில் வெளிவந்த இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இனி, தான் படங்களையே இயக்கப்போவதில்லை என்றும் தன்மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என நிரூபித்த பின்னரே தான் படம் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார் சனல்குமார் சசிதரன்.. ஒருவேளை தன் உயிர் உள்ளவரை அப்படி நடக்காவிட்டால், இனி படமே இயக்காமல் ஏற்கனவே ஏழு படங்களை இயக்கியுள்ள மனநிறைவுடன் இருந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார் சனல் குமார் சசிதரன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!