
மகேஷ்பாபுவிடம் மோத விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்
இந்நிலையில் ஏதேச்சையாக விமான நிலையத்தில் இவரை சந்தித்த ஒரு இயக்குனர் தாடியுடன் இருந்த இவரது தோற்றத்தைப் பார்த்து தான் இயக்கிய விளம்பர படத்தில் இவரை நடிக்க வைத்தார். அதைத்தொடர்ந்து பேஷன் ஷோக்கள், டிவி விளம்பரங்கள் என ஓரளவு வாய்ப்புகள் நிதின் மேத்தாவை தேடி வர ஓரளவு பிரபலமாக ஆரம்பித்தார். அந்த சமயத்தில்தான் பாலகிருஷ்ணாவுடன் அகாண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தின் மூலம் இவர் மீது வெளிச்சம் விழ தற்போது சில படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தள்ளது. அந்த வகையில் விரைவில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி ஆகியோரிடம் அடி வாங்குவதற்காக காத்திருக்கிறேன் என்று பிரபல ஹீரோக்களின் படங்களில் வில்லானாக நடிக்க விரும்பும் தனது ஆசையையும் வெளிப்படுத்தி உள்ளார் நிதின் மேத்தா


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!