
சுரேஷ்கோபி நடிக்கும் ஹைவே 2 : 27 வருடம் கழித்து 2ம் பாகம்
அந்தவகையில் சுரேஷ் கோபியின் 254வது படமாக "ஹைவே-பார்ட் 2" என்கிற படம் உருவாக இருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுரேஷ்கோபியே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 1995ல் சுரேஷ்கோபி நடிப்பில் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ஹைவே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் ஆகி இந்த இரண்டு மொழி ரசிகர்களிடையே சுரேஷ்கோபியை ஆக்சன் ஹீரோவாக கொண்டு சேர்த்தது என்றும் சொல்லலாம்.
இந்த படத்தை இயக்கிய ஜெயராஜின் டைரக்சனில் அடுத்ததாக சில படங்களில் இணைந்து நடித்த சுரேஷ்கோபி அவரது டைரக்ஷனில் நடித்த களியாட்டம் என்கிற படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார். கடந்த 2006ல் வெளியான அஸ்வரூதன் என்கிற படத்தில் ஜெயராஜ் டைரக்சனில் நடித்திருந்த சுரேஷ்கோபி கிட்டத்தட்ட 16 வருடம் கழித்து மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். பரத் நடித்து தமிழில் வெளியான "4 ஸ்டுடண்ட்ஸ்" மற்றும் சில நேரங்களில் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இயக்குனர் ஜெயராஜ் நன்கு அறிமுகமானவர்தான்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!