
பிரபாஸின் ‛சலார் படத்தில் இணைந்த பிருத்விராஜ்
இந்நிலையில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்திய பிருத்விராஜ், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‛இது பிரபாஸ் படம் நோ சொல்ல முடியாது.. ஓகே சொல்லிட்டேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும், சலார் படத்தில் நடிக்க ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டுக் கொண்டேன் என்றும் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். எத்தனை மொழிகளில் படத்தை வெளியிட்டாலும், அத்தனை மொழிகளிலும் சொந்த குரலிலேயே டப்பிங் பேசி விடுகிறேன். அது சுமராக இருந்தாலும், எத்தனை முறை பேச சொன்னாலும் பேசி நடிக்கிறேன் என சொன்னதும், பிரசாந்த் நீல் சிரித்து விட்டு நீங்க வந்தா மட்டும் போதும் எனக் கூறியிருக்கிறாராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!