
விராட பருவத்தை அனுமதித்தது தவறு; சென்சார் அதிகாரிகள் மீது போலீசில் புகார்
ஐதராபாத்தை சேர்ந்த சிபாலிகுமார் என்பவர் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் இந்த படம் நக்சலைட்டுகளை ஆதரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை இந்த படத்தில் காட்டி இருப்பது மிகப்பெரிய தவறு. மேலும் இந்த படத்தின் கதை இளைஞர்களை நக்சல் பக்கம் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட படத்திற்கு சென்சார் அதிகாரிகள் தணிக்கை சான்றிதழ் அளித்தது தவறு. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் இந்த படத்தை உடனே தியேட்டரில் வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படியும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!