
தகாத உறவு : சிறைக்கு செல்லும் ஹாலிவுட் நடிகர்
இந்த நிலையில் இந்த வழக்குகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 10ம் தேதி நடக்க இருக்கிறது. அன்றே தீர்ப்பும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அன்றைய தினம் நேரில் அஜராகுமாறு லண்டன் நீதிமன்றம் கெவினுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் கெவின் ஸ்பேசிக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்த கெவின் 1980ம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் நுழைந்தார். சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என இருமுறை ஆஸ்கர் விருதுகளை வென்றவர். கெவின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!