
கணவரை தேடி பாலைவனத்திற்கு கிளம்பி சென்ற பிரித்விராஜ் மனைவி
இந்த படத்தில் கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நஜீப் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரித்விராஜ். இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பை அதே வாடி ரம் பகுதியில் தற்போது நடத்தி வருகின்றனர் ஆடுஜீவிதம் படக்குழுவினர். இதற்காக கடந்த மாதமே பிரித்விராஜ் கேரளாவில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அவரது மகள் அலங்கரிதா தந்தையை பார்க்க வேண்டும் அடம் பிடித்ததால் மகளை அழைத்துக்கொண்டு கணவரை பார்ப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் பாலைவனத்திற்கே கிளம்பி வந்துவிட்டார் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன். மனைவி குழந்தையின் வருகையால் படப்பிடிப்பிற்கு அவ்வப்போது கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்துடன் ரிலாக்ஸாக ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பி விடுகிறாராம் பிரித்விராஜ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!