
70 இயக்குனர்களிடம் கதைகேட்டு 10 படங்களில் நடித்து வரும் குருசோமசுந்தரம்
அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார் குருசோமசுந்தரம். இதற்காக சுமார் 70 புது இயக்குனர்களிடம் கதை கேட்டதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து பத்து படங்களை தேர்ந்தெடுப்பதே தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார் குருசோமசுந்தரம். அவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது இன்னும் கொஞ்ச நாளைக்கு அவரை தமிழ் திரையுலகம் பக்கம் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!