
ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் ஷாஜி கைலாஷ் படம்
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்கே வை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் அதன் பிறகு மலையாள திரையுலகம் பக்கம் செல்லவே இல்லை. 2017ல் ஆர்கே நடித்த வைகை எக்ஸ்பிரஸ் என்கிற படத்தை இயக்கிய பிறகு கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து தற்போது தான் அவரது அடுத்த படம் ரிலீசாக இருக்கிறது.
தற்போது பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள கடுவா என்கிற திரைப்படம் வரும் ஜூன் 30ஆம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் கடுவாக்குன்னல் குஞ்சச்சன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். லூசிபர் படத்திற்கு பிறகு மீண்டும் விவேக் ஓபராய் நடிக்கும் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!