
பான் இந்தியா படத்தில் ராம் பொத்தனேனி: போயபத்தி சீனு இயக்குகிறார்
பான் இந்தியா படத்தை ஸ்ரீனிவாசா சிட்தூர தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. என்றாலும் நேற்று ஐதராபாத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் ராம் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
படம் குறித்து தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி கூறியிருப்பதாவது: போயபத்தி சீனுவின் இயக்கத்தில் இப்படத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். "தி வாரியர்" படத்திற்குப் பிறகு ராம் பொத்தினேனியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் பேனரில் வரும் மதிப்புமிக்க படமாக இருக்கும்.
இந்த படத்தை நாங்கள் உயர் தொழில்நுட்ப தரத்துடன் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கிறோம். படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிட உள்ளோம். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்போம், என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!