
மஞ்சுவாரியர் புகார் எதிரொலி : போலீஸ் காவலில் இயக்குனர்
இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் கொச்சி போலீசாரிடம் சனல்குமார் சசிதரன், தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி தனக்கு தொல்லை கொடுப்பதாகவும், சோசியல் மீடியா பக்கத்தில் தன்னை பற்றி அவதூறாக செய்தி பரப்புவதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் போலீசார் இயக்குனர் சனல்குமார் சசிதரனை தங்களது காவலில் எடுத்துள்ளனர். இதையடுத்து அவரை மஞ்சுவாரியார் புகார் கொடுத்துள்ள கொச்சி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று இதுபற்றி விசாரிக்க உள்ளனர்,
இதுபற்றி மலையாள திரையுலகில் சிலர் கூறும்போது, “காயாட்டம் படத்தில் மஞ்சு வாரியர் நடித்தபோது இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மஞ்சுவாரியர் இயக்குனருடன் பெரிய அளவில் தொடர்பில் இல்லை என்றும் சொல்கிறார்கள். அதேசமயம் மஞ்சுவாரியர் மீது இப்படி திடீரென தேவையில்லாமல் அவர் ஆபத்தில் இருப்பதாக சோசியல் மீடியா மூலமாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருப்பதில் நிச்சயமாக ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே பலரும் கூறுகின்றனர். போலீசார் விசாரணையில் சனல்குமார் சசிதரன் ஏன் இப்படி செய்தார் என்கிற உண்மை தெரிய வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!