
கன்னடத்தில் அறிமுகமாகும் துளு நடிகை
கன்னடத்தில் நடிப்பது குறித்து ரச்சனா கூறியதாவது: எனது முதல் கன்னட படத்திலேயே இவ்வளவு அருமையான டீமுடன் பணியாற்றியது பாக்கியம். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரியும் பெண்ணாக நடிக்கிறேன். காதல் ஒரு பெண்ணிடம் உளவியல் ரீதியாக எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
நான் ஒரு விளையாட்டு வீராங்கணையாக இருந்தாலும் சின்ன வயதில் இருந்தே நடிப்பு மிகவும் பிடிக்கும். பள்ளி, கல்லூரி காலங்களில் நாடகங்களில் நடித்த அனுபவம் இப்போது கைகொடுக்கிறது. இந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. என்கிறார் ரச்சனா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!