
சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற ரோஜா
சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர மாநில நகரி சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ.,வாக இருக்கும் ரோஜா, சமீபத்தில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சரான பின் ஹைதராபாத்தில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோரை தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடிகர் சிரஞ்சீவியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அது குறித்து, “நான் சினிமாவிலிருந்து விலகியதற்கும், ஆந்திர மாநில அமைச்சரானதற்கும் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்தது மகிழ்ச்சி. சுரேகா (சிரஞ்சீவி மனைவி) அவர்களுக்கு சிறப்பு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவி, ரோஜா இருவரும் இணைந்து "முட்டா மேஸ்திரி (1993), முக்குரு மொங்கலு (1994), பிக் பாஸ் (1995) ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!