
சுரேஷ்கோபி நடிக்கும் மே ஹூம் மூசா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த காவல் என்கிற திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் ஜோஷியின் டைரக்ஷனில் அவர் நடித்துள்ள பாப்பான் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு மே ஹூம் மூசா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிமூங்கா என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜிபு ஜேக்கப் தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சுரேஷ்கோபியின் ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இந்தப்படம் குறித்து வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ், அதன் பின்னணியில் ஒலிக்கும் அரபு இசை மற்றும் இந்த படத்தின் டைட்டிலை பார்க்கும்போது இது ஒரு கேங்க்ஸ்டர் பாணியில் உருவாகும் படம் என தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!