
காட்பாதர் மூலம் நடிகராக மாறிய பூரி ஜெகன்நாத்
மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படம் தான் தற்போது காட்பாதர் என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கியமான வேடம் ஒன்றில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு விடைபெற்ற நிலையில் தற்போது பூரி ஜெகன்நாத் முதல் முறையாக ஒரு நடிகராக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரணை முதன்முறையாக சிறுத்தா என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான். தற்போது அவரையே தனது படத்தில் நடிகராக அறிமுகப்படுத்துகிறார் சிரஞ்சீவி.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!