
மலையாள நடிகர் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
சீனிவாசனுக்கு கடந்த வாரம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு இருதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, சீனிவாசனுக்கு கடந்த மாதம் 31ம் தேதி இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாவும் உயிருக்கு ஆபத்தான கடத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!