
திலீப்பின் வழக்கறிஞர்களுக்கு எதிராக பார் கவுன்சிலை நாடிய நடிகை
இந்தநிலையில் திலீப்பின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கை திசைதிருப்பும் விதமாக சட்ட மற்றும் தார்மீக விதிகளுக்கு புறம்பாக முறையற்ற வகையில் நடந்துகொள்வதாக, பாதிக்கப்பட்ட நடிகை குற்றம் சாட்டியுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேரள பார் கவுன்சிலில் முறையிட்டுள்ளார்.
இந்த புகாரில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ள நடிகை, அவர்கள் அதுபோன்று நடந்துகொண்ட பல தருணங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளாராம்.. குறிப்பாக தங்களது விதி மீறிய நடவடிக்கைகளால் தனது தரப்பு சாட்சிகளான இருபது பேரை கட்டாயப்படுத்தி பிறழ் சாட்சிகளாக மாற்றிவிட்டனர் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
இவர்களது செயல் அதிர்ச்சி தருவதாகவும் மன்னிக்க முடியாததாகவும் இருப்பதாகவும் கூறியுள்ள நடிகை, கேரள பார் கவுன்சில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடுநிலையான உண்மையான விசாரணை நடத்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!