
ரவிதேஜாவின் முதல் பான் இண்டியா படம்: நாளை தொடங்குகிறது
இதனை முன்னணி இயக்குநர் வம்சி இயக்குகிறார். "தி காஷ்மீர் பைல்ஸ்" என்ற படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். இதன் தொடக்க மாதப்பூரில் உள்ள ஹெச் ஐ சி சி வளபாகத்தில் நடைபெறுகிறது.
1970களில் தென்னிந்தியா முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட துணிச்சல்மிக்க திருடன் டைகர் நாகேஸ்வரராவ். இவன் வசித்த ஸ்டூவர்ட்புரம் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டடுள்ள படம். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உருவாகிறது. ஆர் மதி ஒளிப்பதிவு செய்ய, ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!