
தெலுங்கு இயக்குனருக்கு நஸ்ரியா புகழாராம்
நானி கதாநயகனாக நடிக்கும் இந்தப்படத்தை "மெண்டல் மதிலோ" புகழ் விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஜூன்-10ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள நஸ்ரியா, இயக்குனர் பற்றியும் அவருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி நஸ்ரியா கூறும்போது, “இன்று என்னுடைய டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன்.. இயக்குனர் விவேக் ஆத்ரேயாவை போல இந்த பயணம் முழுவதும் ஒரு சிறந்த வழிகாட்டியை நான் பெற்றிருக்க முடியாது. ஒரு அற்புதமான மனிதராக இருந்து, சிறந்த நண்பராக மாறிய உங்களுடன் ஒவ்வொரு நாளும் வேலை செய்வதை நான் விரும்பினேன். கடந்த ஒரு வருடமாக நீண்ட இந்த பயணத்தில். நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.. இனி அடுத்த முறை பார்க்கும் வரை உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுவேன் " என்று கூறியுள்ளார் நஸ்ரியா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!