
மொபைல்போன் மூலமாக திலீப்புக்கு மேலும் ஒரு சிக்கல்
இதைத்தொடர்ந்து திலீப் மீது புதிய வழக்கு பதியப்பட்டு அந்த வழக்கு சம்பந்தமான விசாரணையும் நடைபெற்று ஒரு வழியாக அதில் திலீப்புக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதேசமயம் திலீப்பிடம் இருந்த நான்கு மொபைல் போன்கள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு பாரன்சிக் டிபார்ட்மென்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது அந்த மொபைல் போன்களில் சில குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாக பாரன்சிக் அதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாம்.
இந்த மொபைல் போன்களை ஒப்படைப்பதற்கு முன்பாக திலீப் அவற்றை மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்திடம் கொடுத்து சரி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த மொபைல் சர்வீஸ் சென்டரில் விசாரிப்பதற்காக கேரள போலீசார் மும்பை சென்றுள்ளனராம். இதுபற்றி ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தன்னுடைய மொபைல்போனில் ஏதாவது குளறுபடி செய்தால் அதுவே கூட அவருக்கு எதிரான சாட்சியமாக தான் மாறும். இதுபோக மும்பையிலிருந்து அந்த போனில் என்னென்ன குளறுபடிகள் செய்யப்பட்டன என்கிற விபரங்கள் தெரிய வந்தால் அது இன்னும் திலீப்புக்கு எதிராகவே திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளாராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!