
அரசு மருத்துவமனையை பெருக்கி சுத்தப்படுத்திய எம்எல்ஏ நடிகர்
அந்தவகையில் தனது தொகுதியில் உள்ள தளவூர் என்கிற பகுதியில் தனது எம்எல்ஏ நிதியில் இருந்து சுமார் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி அரசு மருத்துவமனை ஒன்றை புதுப்பித்து கொடுத்தார் கணேஷ்குமார். அந்த மருத்துவமனையின் சுகாதாரம் குறித்து அதிக அளவில் புகார்கள் வந்ததை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக சமீபத்தில் அந்த மருத்துவமனைக்கு அதிரடி விசிட் அடித்தார் கணேஷ்குமார்.
புகார்களில் சொல்லப்பட்டது போலவே மருத்துவமனை சுத்தமாக பராமரிக்க படாமலும் குப்பைகள் நிறைந்தும் காணப்பட்டதை கண்கூடாகவே கண்ட கணேஷ்குமார். அங்கிருந்த ஒரு துடைப்பத்தை எடுத்து மருத்துவமனையை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவரது இந்த செயலால் அங்கிருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்..
அதன்பின் அங்கிருந்த பணியாளர்களிடம் பேசிய கணேஷ்குமார் மக்கள் தங்கள் நோய் தீர்ப்பதற்காக வந்துபோகும் இடத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடும் வாங்குகின்ற சம்பளத்துக்கு கொஞ்சம் நன்றியுணர்வோடும் கவனித்து சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மீண்டும் இதுபோல தொடர்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தி சென்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!