
நடிகை சரயுராய் கைது
இவர் தனியாக ஒரு யு டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அந்த சேனலில் நாட்டு நடப்புகள் பற்றி தனது கருத்தை வெளியிட்டு வருகிறார். பரபரப்புக்காகவும் சேனல் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும் அவ்வப்போது வில்லங்கமான சில விஷயங்களையும் பேசுவார். அந்த வரிசையில் சமீபத்தில் கடவுள்களையும், கடவுளை வணங்குகிறவர்களையும் மோசமாக கிண்டல் செய்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து அவர்மீது பல்வேறு அமைப்பினர் புகார் கூறி வந்தனர்.
குறிப்பாக தெலுங்கானா விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஐப்புரி அசோக் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் சரயுராயை கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!