
எழுபதுகளின் அமிதாப் அல்லு அர்ஜுன் : புகழும் டப்பிங் கலைஞர்
இதுபற்றி ஸ்ரேயாஸ் தல்பாடே கூறும்போது, "ஒரு ஹீரோவுக்கு டப்பிங் பேசியதற்காக இந்த அளவிற்கு பாராட்டு கிடைப்பது இதுதான் முதன்முறை. படம் பார்த்தவர்கள் அனைவருமே புஷ்பாவுக்கு பொருத்தமான குரல் என கூறினார்கள். என் மகள் கூட பலரும் அப்படிச் சொல்வதைக் கேட்டு, புஷ்பா படத்தை பார்த்துவிட்டு அன்றிரவு தூங்கப் போகும்போது என்னிடம் குட்நைட் புஷ்பா என்று கூறினார். இதுதான் எனது வேலைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்த படத்திற்காக டப்பிங் பேச ஆரம்பித்த சமயத்தில் படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பை பார்த்ததும் எனக்கு எழுபதுகளில் துடிப்பான அமிதாப்பச்சனை பார்ப்பது போலவே இருந்தது என்று அல்லு அர்ஜுனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ஸ்ரேயாஸ் தல்பாடே.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!